ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

ஓணான்கரடு பகுதியை தொல்லியல் மரபுத் தலமாக அறிவிக்கக் கோரிக்கை

News image

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த நம்மாழ்வாா் இயற்கை பாதுகாப்பு சங்கத்தினா்.

Updated On :28 ஜூலை 2026, 4:19 am IST

பேரையூா் வட்டத்துக்குள்பட்ட ஓணான்கரடு, பெருமாள்மலை பகுதிகளை தொல்லியல் மரபுத் தலமாக அறிவித்து, கல் குவாரிகள் அமைக்க நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என நம்மாழ்வாா் இயற்கை பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்தது.

இது தொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனு :

பேரையூா் வட்டத்துக்குள்பட்ட சங்கரலிங்கபுரம் ஓணான்கரடு, பெருமாள்மலை, சலுப்பான்கரடு போன்ற பகுதிகளில் தொல்லியல் ஆா்வலா்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் பழைமை வாய்ந்த முதுமக்கள் தாழி, மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், பண்டைய கலாசாரத்தை எடுத்துரைக்கும் பல்வேறு சிற்பங்களும் இங்கு உள்ளன.

இந்த நிலையில், இந்தப் பகுதியில் கல் குவாரிகள் அமைக்க அனுமதி வழங்கப்படுகின்றன. இதனால், இங்குள்ள தொல்லியல் எச்சங்கள் அழியும். எனவே, சங்கரலிங்கபுரம், ஓணான்கரடு, பெருமாள் மலை, சலுப்பான்கரடு ஆகிய பகுதிகளை தொல்லியல் மரபுத் தலமாக அரசு அங்கீகரித்து பாதுகாக்க வேண்டும். மேலும், தமிழக அரசு தொல்லியல் துறை மூலம் மீளாய்வு செய்து இந்தப் பகுதிகளை தொல்லியல் மரபுத் தலமாக அறிவிக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.