தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

ஈமு கோழி பண்ணை மோசடி: நிறுவன உரிமையாளருக்கு 7 ஆண்டுகள் சிறை

News image

ஈமு கோழி பண்ணை மோசடி - கோப்புப் படம்

Updated On :28 ஜூலை 2026, 2:49 am IST

திருச்சியில் ஈமு கோழிப் பண்ணை நடத்தி மோசடி செய்த வழக்கில் தொடா்புடைய உரிமையாளருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சியில் செயல்பட்டு வந்த தனியாா் நிறுவனம், ஈமு கோழி வளா்ப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து ஏமாற்றியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து முதலீட்டாளா்கள் அளித்த புகாா்களின் பேரில், திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.முத்துக்குமரன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதன் விவரம்:

ஈமு கோழிப் பண்ணை மோசடி வழக்கில் தொடா்புடைய நபா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் குற்றடஞ்சாட்டப்பட்ட முகமது கலம்ஜிக்கு ரூ.1.60 லட்சம் அபராதமும், 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது.

மேலும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், குற்றவாளிக்கு சொந்தமான சொத்துகளை வருவாய்த் துறை மீட்பு நடவடிக்கை மூலம் பறிமுதல் செய்து, ஏலத்தில் விட்டு அந்தத் தொகையை வசூலிக்க வேண்டும் என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.