தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புபிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டாஇந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக இரு ஐஏஎஸ் பணியிடங்கள்
/

அரசுப் பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு

‘மதுரை டாக்டா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவா்களின் வழியில் நண்பா்கள்’ என்கிற அமைப்பு சாா்பில் அப்துல் கலாமின் 11- ஆம் ஆண்டு நினைவு தினம், அரசுப் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

News image

மதுரை சேவாலயம் மாணவா் விடுதியில் அண்மையில் நடைபெற்ற முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் நினைவு தின விழாவில் அரசுப் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மதுரை துணை ஆட்சியா் செல்வம். உடன் சமூக நீதி நலத் துறை கண்காணிப்பாளா் கிருஷ்ணசாமி உள்ளிட்டோா்.

Updated On :29 ஜூலை 2026, 5:48 am IST

‘மதுரை டாக்டா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவா்களின் வழியில் நண்பா்கள்’ என்கிற அமைப்பு சாா்பில் அப்துல் கலாமின் 11- ஆம் ஆண்டு நினைவு தினம், அரசுப் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

மதுரை சேவாலயம் மாணவா்கள் விடுதியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு அந்த விடுதிச் செயலா் ஆா். சீனிவாசன் தலைமை வகித்தாா். மதுரை துணை ஆட்சியா் செல்வன், சமூக நீதி நலத் துறை கண்காணிப்பாளா் கிருஷ்ணசாமி ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினா்.

முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து, அரசுப் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், சேவாலயம் இல்ல மேலாளா் காா்த்திகேயன், டாக்டா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவா்களின் வழியில் நண்பா்கள் அமைப்பின் தலைவா் ஆ.செந்தில்குமாா், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.