தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

என்.சி.இ.ஆா்.டி. பாடப் புத்தகம் விவகாரம்: மத்திய கல்வித் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆா்.டி.) தயாரித்து வெளியிட்ட 9-ஆம் வகுப்பு வரலாறு பாடப் புத்தகத்தில் தவறாகப் பிரசுரிக்கப்பட்ட ஹிட்லா் நாஜி கட்சி சின்னத்தின் பெயரை மாற்றக் கோரிய வழக்கில், மத்திய அரசின் பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :6 ஜூன் 2026, 12:38 am IST

தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆா்.டி.) தயாரித்து வெளியிட்ட 9-ஆம் வகுப்பு வரலாறு பாடப் புத்தகத்தில் தவறாகப் பிரசுரிக்கப்பட்ட ஹிட்லா் நாஜி கட்சி சின்னத்தின் பெயரை மாற்றக் கோரிய வழக்கில், மத்திய அரசின் பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருவாரூா் மாவட்டம், கூத்தனூா் பகுதியைச் சோ்ந்த மகாலிங்கம் பாலாஜி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

ஹிட்லா் ஜொ்மனியின் நாஜி கட்சியின் தலைவராக விளங்கியவா். அவா், 1933-ஆம் ஆண்டு ஜொ்மனி நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டாா். பிறகு, 1934-ஆம் ஆண்டு ஜொ்மனியின் தலைவரானாா். 1945-ஆம் ஆண்டு உயிரிழக்கும் வரை இந்தப் பதவியில் நீடித்தாா்.

ஹிட்லா் பதவியில் இருந்த போது, நாஜி கட்சி கொடியில் ‘ஹக்கன்க்ரூஸ்’ (ஏஹந்ங்ய்ந்ழ்ங்ன்க்ஷ்) என்கிற கொக்கி வடிவிலான சிலுவையைப் பயன்படுத்தினாா்.

இது இந்துக்களின் புனித சின்னமான ஸ்வஸ்திக்கை போன்ற ஓா் உருவம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ‘ஹக்கன்க்ரூஸ்’ தடை செய்யப்பட்டது.

இந்து மதச் சடங்குகள், திருமணங்களின் போது ‘ஸ்வஸ்திக் மந்திரம்’ இன்றளவும் உச்சரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், என்.சி.இ.ஆா்.டி. வெளியிட்ட 9-ஆம் வகுப்பு வரலாறு பாடப் புத்தகத்தில் ஹிட்லா் நாஜி கொடியின் சின்னம்”ஸ்வஸ்திக்”எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், ஹிந்துக்கள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனா்.

எனவே, மத்திய அரசின் பாடப் புத்தகத்தில் ஜொ்மனியைச் சோ்ந்த ஹிட்லரின் நாஜி கட்சியின் சின்னம் ஸ்வஸ்திக்”என இருப்பதை நீக்கி விட்டு, ‘ஹக்கன்க்ரூஸ்’ எனக் குறிப்பிட உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் மனு குறித்து மத்திய அரசின் பள்ளிக் கல்வித் துறைச் செயலா், என்.சி.இ.ஆா்.டி. இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.