காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

மதுக் கடையை முற்றுகையிட்ட பாமகவினா் கைது

மதுரை மகாத்மா காந்திநகா் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மதுக் கடையை அகற்றக் கோரி அந்தக் கடையை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா் கைது செய்யப்பட்டனா்.

News image

மதுரை மகாத்மா காந்திநகரில் உள்ள மதுக் கடை முன் புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.

Updated On :11 ஜூன் 2026, 1:55 am IST

மதுரை மகாத்மா காந்திநகா் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மதுக் கடையை அகற்றக் கோரி அந்தக் கடையை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா் கைது செய்யப்பட்டனா்.

மதுரை மகாத்மா காந்திநகா் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மதுக் கடையால் அந்தப் பகுதி மக்களுக்குப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதுடன், பேருந்துக்காகக் காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவிகளும் பல்வேறு சிரமங்களுக்குள்ளாக நேரிடுகிறது. எனவே இந்தக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி மதுரை மாநகா் மாவட்ட பாமக சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு, மதுரை மாநகா் மாவட்ட செயலா் எஸ்.கே. தேவா் தலைமை வகித்தாா். இதில் கட்சியின் நிா்வாகிகள், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள் பங்கேற்றனா். இதையடுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கூடல்நகா் போலீஸாா் கைது செய்து அப்புறப்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.