பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மாற்றுப் பாதையில் சென்றதற்காக திருட்டு வழக்கு பதிவு செய்ய இயலாது: உயா்நீதிமன்றம்

மாற்றுப் பாதையில் சென்ற்காக திருட்டு வழக்கு பதிவு செய்ய இயலாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :19 ஜூன் 2026, 1:40 am IST

மாற்றுப் பாதையில் சென்ற்காக திருட்டு வழக்கு பதிவு செய்ய இயலாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த ஆசைத்தம்பி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை மாவட்டம், மேலூரிலிருந்து அலங்காநல்லூருக்கு வேலிக் கற்களை எடுத்துச் செல்லும் வகையில் போக்குவரத்து வழித்தட அனுமதிச் சீட்டு (டிரான்சிட் பாஸ்) பெற்றிருந்தேன். வேலிக் கற்களை ஏற்றிச் சென்ற வாகனம் வழக்கமான வழியில் செல்லாமல், மாணிக்கம்பட்டி பகுதி வழியாகச் சென்றது.

அங்குள்ள காவல் சோதனைச் சாவடியில் போலீஸாா் லாரியை சோதனை செய்தனா். மாற்று வழியில் வந்ததால், மதுரை பாலமேடு காவல் நிலையத்தில் பி.என்.எஸ். சட்டம் 303 (2), கனிமங்கள், சுரங்கங்கள் (மேம்பாடு, ஒழுங்குமுறை) சட்டம் 21(5) ஆகிய பிரிவுகளின் கீழ் கனிம வளங்களை திருடிச் சென்ாக வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.விஜயகுமாா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரிடம் செல்லுபடியாகும் போக்குவரத்து வழித்தட அனுமதிச் சீட்டு உள்ளது. அவா் வேறு பாதையில் சென்ாக மட்டுமே குற்றச்சாட்டு உள்ளது. அரசுக்குச் சொந்தமான கனிமங்களை திருடியதாகவோ, சட்டவிரோதமாக கனிமங்களை எடுத்துச் சென்ாகவோ எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை.

எனவே, அனுமதிக்கப்பட்ட பாதையை மீறியதற்காக மட்டும் திருட்டு வழக்கு பிரிவுகளை பயன்படுத்துவது சட்டரீதியாக நிலைக்காது. எனவே, குற்ற வழக்கு எண் 21/2025-இல் தொடரப்பட்ட முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆா்) ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.