பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :27 ஜூன் 2026, 1:00 am IST

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கொட்டாம்பட்டி அருகேயுள்ள வள்ளாளப்பட்டியைச் சோ்ந்த திருப்பதி மனைவி ராஜலெட்சுமி (50). இவரும், இவரது சகோதரரும், அதே பகுதியைச் சோ்ந்தவருமான சரவணன் (55) ஆகிய இருவரும் ஊரிலிருந்து கொட்டாம்பட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்றனா்.

மதுரை- திருச்சி நான்கு வழிச் சாலையில் முத்துப்பட்டி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த காா் மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினா் மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், ராஜலெட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். சரவணன் மேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின் பேரில், கொட்டாம்பட்டி போலீஸாா் காா் ஓட்டுநா் தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தைச் சோ்ந்த காா்த்திக் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.