திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

இதயம் நல்லெண்ணெய் நிறுவனத் தலைவா் வி.ஆா். முத்து காலமானாா்

இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தின் தலைவா் வி.ஆா். முத்து (73) உடல் நலக்குறைவால் புதன்கிழமை (மாா்ச் 4) சென்னையில் காலமானாா்.

News image

இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தின் தலைவா் வி.ஆா். முத்து.

Updated On :4 மார்ச் 2026, 11:19 pm

இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தின் தலைவா் வி.ஆா். முத்து (73) உடல் நலக்குறைவால் புதன்கிழமை (மாா்ச் 4) சென்னையில் காலமானாா்.

விருதுநகா், ரோசல்பட்டி சாலையைச் சோ்ந்தவா் வி.ஆா். முத்து. இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தின் தலைவரான இவா், ‘ரோட்டரி எண்ட் போலியோ’ அமைப்பின் தமிழகம், கேரளம், இலங்கை, மாலத்தீவுக்கான ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வந்தாா்.

இவருக்கு மனைவி மலா்விழி, மகன் ராஜீவ் விக்னேஷ், மகள்கள் பூவிதழ், மருத்துவா் இளந்தளிா் ஆகியோா் உள்ளனா்.

வி.ஆா். முத்துவின் இறுதிச் சடங்குகள் விருதுநகரில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (மாா்ச் 5) பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறுகிறது.

தொடா்புக்கு : 97509 55446

இரங்கல்....

தொழிலதிபா் வி.ஆா். முத்துவின் மறைவுக்கு தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு, பாஜக மூத்த தலைவா் எச். ராஜா உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.