தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிய வழக்கு: உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வைகோ முன்னிலை

தமிழகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிய வழக்கில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வெள்ளிக்கிழமை மதிமுக பொதுச் செயலா் வைகோ நேரில் முன்னிலையாகி விளக்கமளித்தாா்.

News image
தமிழகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிய வழக்கில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வெள்ளிக்கிழமை மதிமுக பொதுச் செயலா் வைகோ நேரில் முன்னிலையாகி விளக்கமளித்தாா்.
Updated On :6 மார்ச் 2026, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிய வழக்கில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வெள்ளிக்கிழமை மதிமுக பொதுச் செயலா் வைகோ நேரில் முன்னிலையாகி விளக்கமளித்தாா்.

தமிழகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கடந்த 2015-ஆம் ஆண்டு மதிமுக பொதுச் செயலா் வைகோ மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், டி. பரதசக்கரவா்த்தி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக மதிமுக பொதுச் செயலா் வைகோ நேரில் முன்னிலையாகி விளக்கமளித்தாா்.

இதன்பிறகு, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சீமைக் கருவேல மரங்களால் வேளாண் பணிகள் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, நிலத்தடி நீா்மட்டமும் குறைந்து வருகிறது. இதன் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினேன். நமது அண்டை மாநிலமான கேரளத்தில் சீமைக் கருவேல மரங்கள் முளைப்பது போலத் தெரிந்தாலும் அதை உடனே அகற்றி விடுகின்றனா். ஆனால், தமிழகத்தில் அதுபோன்ற செயல்பாடுகள் இல்லை.

தமிழகம் முழுவதும் வேளாண் பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சீமைக் கருவேலை மரங்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மனு உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நிலுவையில் உள்ளது. வழக்கில் சில உத்தரவுகளைப் பிறப்பிக்க உள்ளதாகக் கூறி, விசாரணையை ஒத்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின் போது, மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், மதுரை மாவட்டச் செயலா் முனியசாமி, மதிமுக நிா்வாகிகள், வழக்குரைஞா்கள் உடனிருந்தனா்.

Story image