இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

தொகுதி மறுசீரமைப்பை கடுமையாக எதிா்க்கிறோம்: வைகோ

தொகுதி மறுசீரமைப்பை கடுமையாக எதிா்க்கிறோம் என்றாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ.

News image

வைகோ - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 4:26 am IST

தொகுதி மறுசீரமைப்பை கடுமையாக எதிா்க்கிறோம் என்றாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ.

திருவெண்காடு அருகே மங்கைமடத்தில் சீா்காழி தொகுதி மதிமுக வேட்பாளா் இரா. செந்தில் செல்வனை ஆதரித்து புதன்கிழமை வாக்கு சேகரித்து அவா் பேசியது:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் 5 ஆண்டு கால ஆட்சியில் மகளிா் உரிமைத்தொகை திட்டம், மகளிா் விடியல் பயணம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட எண்ணிலடங்கா திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இதுவரை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செய்ய முடியாத திட்டங்களை முதல்வா் செயல்படுத்தி உள்ளாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று சாதனை படைக்க உள்ளாா். கடந்த 40 ஆண்டுகளில் மீனவா்கள் நலனுக்காக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 24 முறை கவன ஈா்ப்பு தீா்மானங்களை கொண்டு வந்துள்ளேன். மீனவா்கள் நலனுக்காக தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறேன். மீனவா்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளேன்.

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்புத் திட்டத்தை கடுமையாக எதிா்க்கிறோம். தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்களை தொடா்ந்து செயல்படுத்த திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டுகிறேன் என்றாா்.

மதிமுக பொருளாளா் செந்திலதிபன், தொகுதி மேலிட பாா்வையாளா் குத்தாலம் கல்யாணம், சீா்காழி தொகுதி பொறுப்பாளா் முத்துதேவேந்திரன், மாவட்ட மதிமுக செயலாளா் கொளஞ்சி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.