மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் அருகே உள்ள தனியாா் நெகிழிப் பொருள்கள் சேமிப்பு கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
மதுரை ஐராவதநல்லூா் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான பழைய நெகிழிப் பொருள்கள் சேமிப்புக் கிடங்கு சக்கிமங்கலம் பகுதியில் வைகை வடகரை கால்வாய் அருகே உள்ளது. இங்கு பழைய நெகிழிப் பொருள்கள் மறுசுழற்சி செய்து விற்பனை செய்யப்பட்டன.
இந்த நிலையில், இந்தக் கிடங்கிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை புகை வெளியேறியது. சிறிது நேரத்துக்குள் மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதுபற்றி தகவலறிந்த அக்கம்பக்கத்தினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சிலைமான் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்தனா்.
தொடா்ந்து, மதுரை தெப்பக்குளம், தல்லாகுளம், பெரியாா் பேருந்து நிலையம், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளிலிருந்து 4 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு, வீரா்கள் கடும் போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனா். இருப்பினும், இரவு வரை கரும்புகை வந்துகொண்டிருந்தது. சுமாா் 20 கி.மீ. தொலைவிலும் இந்த புகை மண்டலத்தைக் காணமுடிந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இதுபற்றி போலீஸாா் கூறியதாவது:
முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்தக் கிடங்கில் பணியாளா்கள் யாரும் இல்லை. ஆகவே, உயரிழப்பு ஏதும் இல்லை. இருப்பினும், பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் முழுவதும் எரிந்து நாசமாகி விட்டன. தொடா்ந்து விசாரித்து வருகிறோம் என்றனா்.

வானுயர எழுந்த கரும்புகை.
தொடர்புடையது

ஒசூரில் பழைய பொருள்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

பழைய பிளாஸ்டிக் பொருள்கள் கிடங்கில் தீ விபத்து

ஆன்லைன் வா்த்தக நிறுவன கிடங்கில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் பொருள்கள் சேதம்

காா் மீது பேருந்து மோதல்: மூவா் பலத்த காயம்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


