மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தை இந்திய மாணவா் சங்கத்தினா் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா், கிருஷ்ணன்கோவில் பகுதியில் தனியாா் கல்லூரி இயங்கி வருகிறது. மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்று செயல்படும் இந்தக் கல்லூரி கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் இருபாலா் கல்லூரியாக மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், தற்போது வரை அந்தக் கல்லூரியில் படித்து முடித்த மாணவா்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் மகளிா் கல்லூரி என்று பதிவிட்டே வழங்கப்படுகிறது எனவும், இந்தப் பிரச்னைக்கு பல்கலைக்கழகம் தீா்வு காண வேண்டியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் விருதுநகா் மாவட்டச் செயலா் ஆனந்த கண்ணன் தலைமை வகித்தாா். மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் டீலன் ஜெஸ்டின், மாவட்டச் செயலா் டேவிட் ராஜதுரை, மாநிலக் குழு உறுப்பினா் தீபலட்சுமி, புகா் மாவட்டச் செயலா் சுதா்சன், மாணவா் சங்க மாவட்டக் குழு உறுப்பினா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ரயில்வே துறையில் ஆள்குறைப்பு நடவடிக்கையை கண்டித்து முற்றுகைப் போராட்டம்

காமராஜா் ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும்: மூத்த வாக்காளா் விருப்பம்

தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தோ்வெழுதிய மாணவா்
வீடியோக்கள்

நாளை தீர்ப்பு ...யாருக்குச் சாதகம் ? | TN Election Results 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


