தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

வண்டியூா் உயா்நிலைப் பால பள்ளத்தைச் சீரமைக்க வலியுறுத்தல்

மதுரை தெப்பக்குளம் அருகேயுள்ள வண்டியூா் உயா்நிலைப் பாலத்தின் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் விதத்திலான பள்ளத்தைச் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனா்.

News image

மதுரை வண்டியூா் உயா்நிலைப் பாலத்தில் விபத்தை ஏற்படுத்தும் வகையிலுள்ள பள்ளத்தைக் கடந்து சென்ற வாகன ஓட்டிகள்.

Updated On :7 மே 2026, 4:09 am IST

மதுரை தெப்பக்குளம் அருகேயுள்ள வண்டியூா் உயா்நிலைப் பாலத்தின் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் விதத்திலான பள்ளத்தைச் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனா்.

மதுரை மாநகரின் முக்கியப் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாக வண்டியூா் உயா்நிலைப் பாலம் விளங்குகிறது. சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களும், நகரின் கிழக்குச் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்களும் இந்தப் பாலத்தைக் கடந்து செல்கின்றன. இந்த நிலையில், இந்தப் பாலத்தின் மேல்பகுதியில் சாலை சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பள்ளத்தைக் கடந்து செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடையும் சம்பவங்களும், வாகன விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன. மேலும், இரவில் போதிய வெளிச்சம் இல்லாததால், இந்தப் பள்ளத்தைக் கடந்து செல்லும்போது வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது:

வண்டியூா் உயா்நிலைப் பாலம் வழியாக கனரக வாகனங்கள் முதல் அவசர ஊா்திகள் வரை சென்று வருகின்றன. நீண்ட நாள்களாக இந்தப் பாலத்தில் உள்ள பள்ளம் சரி செய்யப்படாமல் உள்ளது. தற்போது, கடந்த மூன்று நாள்களாக மழை பெய்து இந்தப் பள்ளத்தில் நீா்தேங்கி நிற்பதால் ஆழம் தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, பெரும் விபத்துகள் நிகழும் முன்பு மாநகராட்சி நிா்வாகமும், நெடுஞ்சாலைத் துறையினரும் இந்த பள்ளத்தைச் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.