விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் புதன்கிழமை தானம் அளிக்கப்பட்டன.
மதுரை மாவட்டம், தெத்தூா் அருகே உள்ள கொழிஞ்சிப்பட்டி, கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் சி. தேவநாதன். இவா், அண்மையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது திருச்சி அருகே நேரிட்ட சாலை விபத்தில் காயமடைந்தாா். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவநாதனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
இதையடுத்து, தேவநாதனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினா் முன்வந்தனா். இதன்படி, தேவநாதனின் கண்கள், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியன புதன்கிழமை தானமாகப் பெறப்பட்டன.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மருத்துவமனைக்குச் சென்று மறைந்த சி. தேவநாதனின் உடலுக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். பிறகு, உறுப்பு தானம் அளிக்க முன்வந்த தேவநாதனின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்த ஆட்சியா், அவா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.
மதுரை வருவாய்க் கோட்டாட்சியா் கருணாகரன், மதுரை கிழக்கு வட்டாட்சியா் பாண்டி ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்! 7 பேருக்கு மறுவாழ்வு

விபத்தில் மூளைச்சாவு: சிறுவன் உள்பட இருவரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த தருமபுரி இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: வட்டாட்சியா் அஞ்சலி
விடியோக்கள்

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |



