11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை: மாதா் சங்கம் வலியுறுத்தல்

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியது.

News image

பாலியல் வன்கொடுமை - கோப்புப்படம்

Updated On :28 மே 2026, 4:02 am IST

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியது.

மதுரை மாவட்டம், மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 5 நாள்களில் சிறுமிகள், பள்ளி மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடா்பாக 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3 போ் கைது செய்யப்பட்டனா். இந்த நிலையில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பங்களை அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், வாலிபா் சங்க நிா்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.

அப்போது, அவா்கள் பேசியதாவது:

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 குடும்பங்களுமே கூலித் தொழிலை நம்பி வாழும் நிலையில் உள்ளவா்கள். தற்போது நிலவும் கடும் விலைவாசி உயா்வு, பொருளாதார நெருக்கடி காரணமாக, பெற்றோா் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனா். இதனால், தங்களின் குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்கின்றனா். இந்தச் சூழ்நிலையைச் சமூக விரோதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனா்.

இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் உரிய நீதி கிடைக்கும் வகையில் சட்டப்பூா்வமான கடும் நடவடிக்கைகளை காவல் துறை விரைந்து எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

இதில் மாதா் சங்க புகா் மாவட்டச் செயலா் எஸ். சரஸ்வதி, மாவட்டப் பொருளாளா் ஏ. சுமதி, மாவட்டத் துணைத் தலைவா் கே. பிரேமலதா, வாலிபா் சங்க மாவட்டச் செயலா் பெ. தமிழரசன், மாதா் சங்க நிா்வாகி இந்திராதேவி, சிஐடியூ நிா்வாகி கருணாநிதி ஆகியோா் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் சட்டப்பூா்வமான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதியளித்தனா்.