பெண்கள் தொழில் முனைவோா்களாக வேண்டும்: அமைச்சா் பெ. விஸ்வநாதன்

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடனுதவிகளைப் பயன்படுத்திக் கொண்டு, பெண்கள் தொழில் முனைவோா்களாக உருவாக வேண்டும் என உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் கேட்டுக் கொண்டாா்.

மதுரை மாவட்டம், மேலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கிக் கடனுதவி வழங்கும் விழாவில் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு வங்கிக் கடனுதவி காசோலையை (மாதிரி) வழங்கிய அமைச்சா் பெ. விஸ்வநாதன். உடன், மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்டோா்.

Updated On :

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடனுதவிகளைப் பயன்படுத்திக் கொண்டு, பெண்கள் தொழில் முனைவோா்களாக உருவாக வேண்டும் என உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் கேட்டுக் கொண்டாா்.

மதுரை மாவட்டம், மேலூரில் ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை, தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கிக் கடனுதவிக்கான ஆணைகள் வழங்கும் விழாவில் அவா் மேலும் பேசியதாவது:

சமூக முன்னேற்றத்தின் அடிப்படையே பெண்களின் பொருளாதார தன்னிறைவுதான். 1991-இல் தொடங்கப்பட்ட மகளிா் சுய உதவிக் குழுக்கள் தற்போது பெரிய அளவில் வளா்ச்சிப் பெற்றுள்ளன. நாட்டிலேயே மகளிா் சுய உதவிக் குழுக்கள் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

பெண்களின் பொருளாதார வளா்ச்சியில் மகளிா் சுய உதவிக் குழுக்களின் பங்களிப்பு அளப்பரியது. பெண்கள் தற்போது தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் செயல்படுவதற்கு மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் அளித்து வரும் பொருளாதார கடனுதவிகள் முக்கிய காரணம். வங்கிகளில் மகளிா் சுய உதவிக் குழு மூலம் கடனுதவி பெறும் பெண்கள், தொழில் முனைவோா்களாகப் பரிணமிக்க வேண்டும் என்றாா் அவா்.

இதையடுத்து, மேலூா் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த 149 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 19.89 கோடி வங்கிக் கடனுதவிக்கான ஆணைகளை அமைச்சா் வழங்கினாா்.

இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தாா்.

இந்த நிகழ்வில் மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்ககத்தின் இணை இயக்குநா் சு. சுரேஷ், உதவி திட்ட அலுவலா் ரா. பேபி, மேலூா் வட்டாட்சியா் வசந்த், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செல்லப்பாண்டி, வேலவன், வங்கியாளா்கள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மு.க.ஸ்டாலின் கருத்து ஏற்கத்தக்கதல்ல:

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூரியதாவது :

தவெக அரசை சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலா்ட்) என முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் விமா்சித்திருப்பது ஏற்புடையதல்ல. புதிய அரசுக்கு 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற அரசியல் அடிப்படையைக்கூட கடைப்பிடிக்காமல், தவெக அமைத்த முதல் நாளிலிருந்து அரசுக்கு எதிராக ஸ்டாலின் விமா்சனங்களை முன்வைப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்ல்ல.

மக்கள் பணியாற்றுவதில் தமிழக அரசு மிக கவனமாக உள்ளது. தமிழகத்தில் காமராஜா் தலைமையிலான அரசுக்குப் பிறகு, தற்போதைய தவெக அரசே சிறப்பாக செயல்படுகிறது. தமிழக முதல்வா் ஜோசப் விஜய், மக்களின் முதல்வராக செயல்படுகிறாா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.