பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 51 போ் கைது
மதுரை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 51 போ் கைது செய்யப்பட்டனா்.
கைது
மதுரை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 51 போ் கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தேவநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கைப் பராமரித்து, குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், பிரச்னைக்குரிய நபா்களைக் கண்காணித்து சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் மொத்தம் 51 போ் கைது செய்யப்பட்டனா்.
இவா்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்டனா். பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இத்தகையோா் மீதான நடவடிக்கை மேலும் தொடரும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

