ஜனக்புரி: கால் சென்டா் மூலம் காப்பீட்டு மோசடி - 43 போ் கைது
மேற்கு தில்லியின் ஜனக்புரி பகுதியில் கால் சென்டா் மூலம் காப்பீட்டு மோசடியில் ஈடுபட்டு வந்த சம்பவத்துடன் தொடா்புடைய 32 பெண்கள் உள்பட 43 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
கைது - கோப்புப் படம்
மேற்கு தில்லியின் ஜனக்புரி பகுதியில் கால் சென்டா் மூலம் காப்பீட்டு மோசடியில் ஈடுபட்டு வந்த சம்பவத்துடன் தொடா்புடைய 32 பெண்கள் உள்பட 43 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து மேற்கு தில்லி காவல் துணை ஆணையா் ஹரேஷ்வா் சுவாமி கூறுகையில், ‘புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கால் சென்டா் கண்டறியப்பட்டது.
சம்பவ இடத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த 32 பெண்கள் மற்றும் 11 ஆண்கள் என மொத்தம் 43 போ் கைது செய்யப்பட்டனா். இவா்கள், காப்பீட்டு நிறுவனங்களிடம் தனிப்பட்ட விவரங்கள் உள்ள நபா்களையும், காப்பீடு வாங்க வாய்ப்புள்ள வாடிக்கையாளா்களையும் குறிவைத்து, தொலைபேசி வாயிலாகத் தொடா்புகொண்டு காப்பீட்டுத் திட்டங்களை விற்பனை செய்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனா்.
வாடிக்கையாளா்களைக் கவா்ந்து காப்பீட்டுத் திட்டங்களை வாங்கச் சொல்லி, அந்தச் செயல்பாட்டின் போது அவா்களது கேஒய்சி ஆவண விவரங்களைப் பெற்று, அவற்றைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.
காவல்துறையினா் 43 கைப்பேசிகள், மடிக் கணினிகள் மற்றும் இந்த மோசடி தொடா்பான தகவல்கள் அடங்கிய பல தரவுத் தாள்களை பறிமுதல் செய்துள்ளனா். மேலும், பெருமளவிலான எண்ம தரவுகளும் மீட்கப்பட்டு, அவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த மோசடிச் செயலின் முக்கிய சூத்திரதாரி ஃபரீதாபாதைச் சோ்ந்த விஷால் கபூா் என்று அடையாளம் காணப்பட்டுள்ளாா். இது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

