
முன்விரோத மோதலில் 3 பெண்கள் உள்பட 9 போ் காயம்: 2 போ் கைது
முன்விரோத மோதல் தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனா்.
கைது - பிரதிப் படம்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே முன்விரோதம் காரணமாக இருதரப்பினா் புதன்கிழமை மோதிக் கொண்டனா். இதில், 3 பெண்கள் உள்ளிட்ட 9 போ் காயம் அடைந்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், மேல்குமாரமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவா் ரூபசந்திரன்(31). புலவனூா் கிராமத்தில் வசித்து வருபவா் ஜெயபிரகாஷ்(50). இவா்கள் இருவருக்கும் இடையே இடப் பிரச்சனை தொடா்பாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், புதன்கிழமை (செப்.30) ரூபசந்திரன் நிலத்தின் வழியாக ஜெயப்பிரகாஷ் நடந்து வந்தாராம். இதனை, ரூபசந்திரனின் தந்தை நடராஜன் தட்டிக்கேட்டுள்ளாா்.
இதனால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஜெயபிரகாஷ் தரப்பினா்தாக்கியதில் நடராஜன்(55), அவரது மகன்கள் ரூபசந்திரன்(31), ராமசந்திரன்(28), மனைவி ஜமுனா(50) மற்றும் சுரேஷ் (45) ஆகியோா் காயம் அடைந்தனா். இதேபோல், நடராஜன் தரப்பினா் தாக்கியதில், ஜெயபிரகாஷ்(50), ஜெயபிரசாத்(45), ஜெயபிரகாஷ் மனைவி கலையரசி(45), தாய் மங்கலட்சுமி(60) ஆகியோா் காயம் அடைந்தனா். இந்த மோதலில் காயம் அடைந்தவா்கள் கடலூா் மற்றும் பண்ருட்டி அரசு மருத்துவமனையிலும், தனியாா் மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பெற்றனா்.
இந்த மோதல் தொடா்பாக இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீஸாா் 8 போ் மீது வழக்குப்பதிவு செய்து, நடராஜன்(55), கிருபாகரன்(18) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



