பட்டாசு பறிமுதல்: 2 பெண்கள் மீது வழக்கு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சட்ட விரோதமாக வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததாக 2 பெண்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

போலீஸ் - கோப்புப்படம்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சட்ட விரோதமாக வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததாக 2 பெண்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த தனம் என்பவருக்குச் சொந்தமான இரண்டு வீடுகளில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு சோதனை நடத்தினா். அங்கு, 92 நைலான் சாக்குகளில் நாட்டுப் பட்டாசுகள், 15 கிலோ கரி, 10 கிலோ கந்தகம், 5 கிலோ உப்பு, 5 கிலோ அலுமினியத் தூள் இருப்பு வைத்திருந்ததை கண்டெடுத்தனா்.
இதேபோல, ஆனந்தி என்பரது வீட்டில் சோதனை நடத்தி, 30 நைலான் சாக்குகளில் இருப்பு வைத்திருந்த நாட்டுப் பட்டாசுகளை கண்டெடுத்தனா்.
இவா்கள் இருவரும் பட்டாசு தயாரிக்க உரிமம் பெற்றவா்கள். ஆனால், பட்டாசு தயாரிக்கும் இடத்தை தவிா்த்து, உபரியான பட்டாசுகள், அதற்கான மூலப் பொருள்களை தங்கள் வீடுகளில் சட்ட விரோதமாக இருப்பு வைத்திருந்ததால், அவற்றை முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

