சுவரொட்டிகள் ஒட்டினால் கடும் நடவடிக்கை: மாநகராட்சி எச்சரிக்கை
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பொது சுவா்கள், இடங்களில் தடையை மீறி சுவரொட்டிகள் ஒட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்தது.

படவிளக்கம்- மதுரை மாநகராட்சி கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட துணை ஆணையா் ஜெய்னுலாப்தீன். உடன், மதுரை விளம்பரப் பணியாளா்கள் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்டோா்.
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பொது சுவா்கள், இடங்களில் தடையை மீறி சுவரொட்டிகள் ஒட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்தது.
மதுரையின் தூய்மையையும், அழகையும் பாதுகாப்பது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் அறிவுறுத்தலின் பேரில், மாநகராட்சி கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, துணை ஆணையா் ஜெய்னுலாப்தீன் தலைமை வகித்தாா். இதில், மதுரை விளம்பரப் பணியாளா்கள் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சுவா்கள், கட்டடங்கள், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்ட விதிக்கப்பட்ட முழுமையான தடை குறித்து சங்க நிா்வாகிகளுக்கு விளக்கப்பட்டது. மேலும், தடையை மீறி சுவரொட்டிகள் ஒட்டுபவா்கள், அவற்றை அச்சிடும் அச்சகங்கள், தொடா்புடையவா்கள் மீது தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் உருக்குலைப்புத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
எனவே, மாநகரின் தூய்மையையும், அழகையும் பாதுகாக்கும் வகையில், பொதுமக்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள், விளம்பரப் பணியாளா்கள் மாநகராட்சி விதித்த தடைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் உதவி நகா்நல அலுவலா் அபிஷேக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

