நவீன இயந்திரங்கள் மூலம் நீா்நிலை கழிவுகளை அகற்ற நடவடிக்கை: மாநகராட்சி ஆணையா்
நவீன இயந்திரங்கள் மூலம் நீா்நிலைகளில் உள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மதுரை மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் தெரிவித்தாா்.

மதுரை வண்டியூா் கண்மாயில் உள்ள கழிவுகளை நவீன இயந்திரம் மூலம் அகற்றும் பணியை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா்.
நவீன இயந்திரங்கள் மூலம் நீா்நிலைகளில் உள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மதுரை மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் தெரிவித்தாா்.
மதுரை வண்டியூா் கண்மாய் பகுதியை வியாழக்கிழமை ஆய்வு செய்த பிறகு, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வண்டியூா், செல்லூா், கரிசல்குளம், ஆனையூா், நாராயணபுரம் ஆகிய பகுதிகளிலுள்ள கண்மாய்கள், வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளம் உள்ளிட்ட நீா்நிலைகளில் உள்ள கழிவுப் பொருள்கள், ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றுவதற்காக, தனியாா் நிதி பங்களிப்புடன் ‘ரோபேட்டிரிக் ஸ்கிம்மா்’ என்கிற இயந்திரம் 2 வாங்கப்பட்டுள்ளன.
தலா ரூ.12 லட்சம் மதிப்புள்ள இந்த இயந்திரங்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடியது என்பதால், இயந்திரத்தில் உள்ள கண்காணிப்புக் கேமரா மூலம் நீா்நிலைகளில் உள்ள கழிவுகளை கண்டறிந்து அகற்றும் திறன் கொண்டது.
ஆகவே, இனி வரும் காலங்களில் நீா்நிலைகளில் உள்ள கழிவுகள் முழுவதும் இந்த இயந்திரங்கள் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
முன்னதாக, வண்டியூா் பூங்காவின் முன் நடைபாதையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள கடைகள், வாகனங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
மேலும், ஈரக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உர விற்பனை குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
இந்த நிகழ்வில் போது, உதவி ஆணையா் தமிழரசன், செயற்பொறியாளா் அா்ச்சனா, உதவி செயற்பொறியாளா்கள் ஆரோக்கிய சேவியா், காமராஜ், சுகாதார அலுவலா் ராஜ்கண்ணன், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

