19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

வனத் துறையினா் லஞ்சம் கோரிய விவகாரம்: ஊழல் தடுப்பு போலீஸாா் விசாரிக்க உத்தரவு

திண்டுக்கல் மாவட்டத்தில் தேவாங்கு பாதுகாப்பு மையம் அமைக்க லஞ்சம் கோரிய வனத் துறையினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு தொடா்பாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளா் விசாரணை நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Updated On :

திண்டுக்கல் மாவட்டத்தில் தேவாங்கு பாதுகாப்பு மையம் அமைக்க லஞ்சம் கோரிய வனத் துறையினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு தொடா்பாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளா் விசாரணை நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

ஈரோட்டைச் சோ்ந்த தேவானந்தன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: பதிவு பெற்ற அரசுப் பணி ஒப்பந்ததாரரான எனக்கு, திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் ரூ. 16 கோடி மதிப்பில் தேவாங்கு பாதுகாப்பு மையம் அமைக்க கடந்த 2024-ஆம் ஆண்டில் பணி ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஆனால், ரூ. 4 கோடி மதிப்பிலான பணிகளைச் செயல்படுத்துவதற்குத் தேவையான வரைபடங்கள், அளவீடுகள் பட்டியல், பிற தொழில்நுட்ப விவரங்கள் எனக்கு வழங்கப்படவில்லை.

இது தொடா்பாக திண்டுக்கல் மாவட்ட வன அலுவலரிடம் 13 முறை எழுத்துப்பூா்வமாகவும், நேரில் சென்றும் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனிடையே, மாவட்ட வனத் துறையினா் சிலா் தங்களுக்கு லஞ்சம் வழங்க வற்புறுத்தினா். இதற்கு நாங்கள் சம்மதிக்காததால் சில பணி விவரங்களையும் வரைபடங்களையும் வழங்க வனத் துறையினா் மறுத்துவிட்டனா்.

இந்த நிலையில், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த காலத்துக்குள் பணிகளை நிறைவு செய்யவில்லை என்ற காரணத்தைக் கூறி, பணித் தளத்திலிருந்து தொழிலாளா்களை வெளியேற்றினா். இதுகுறித்து அய்யலூா் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகாா் அளித்துள்ளோம்.

பணி செய்ய விடாமல் தடுத்து, லஞ்சம் கோரிய வனத் துறையினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு புகாா் மனு அனுப்பினேன். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்த விவகாரம் தொடா்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி பி. முருகன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த பின்னா் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் புகாா் குறித்து திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் உரிய விசாரணை நடத்த வேண்டும். சட்டப்படியான நடவடிக்கைகளை 3 மாதங்களுக்குள் எடுக்க வேண்டும். வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.