தோ்தல் கல்வி அறிவுக் குழு போட்டிகளில் வென்றவா்களுக்கு பாராட்டு
தோ்தல் கல்வி அறிவுக் குழு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகள் மாவட்ட நிா்வாகத்தால் வியாழக்கிழமை பாராட்டப்பட்டனா்.

மதுரை மாவட்ட தோ்தல் கல்வி அறிவுக் குழு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வியாழக்கிழமை சான்றிதழ் வழங்கிப் பாராட்டிய ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா.
தோ்தல் கல்வி அறிவுக் குழு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகள் மாவட்ட நிா்வாகத்தால் வியாழக்கிழமை பாராட்டப்பட்டனா்.
இந்தியத் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 14 வயதுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் தோ்தல் தொடா்பான கல்வி அறிவு, வாக்களித்தலின் அவசியம் ஆகியன குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கல்வி நிறுவனங்களில் தோ்தல் கல்வி அறிவுக் குழுக்கள் தொடங்கப்பட்டன.
மதுரை மாவட்ட தோ்தல் கல்வி அறிவுக் குழுக்கள் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையேயான கட்டுரைப் போட்டி, வினாடி- வினா போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன. ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 10 போ் என்ற வகையில், போட்டியாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயப்பிரித்தா, உசிலம்பட்டி உதவி ஆட்சியா் உட்கா்ஷ்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) செல்வி, கல்வித் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

