மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

நகைக் கடை கொள்ளை வழக்கு நிஷாந்திடம் போலீஸாா் தீவிர விசாரணை

மதுரை காளவாசல் அருகேயுள்ள பிரபல நகைக் கடைக்கு வெள்ளிக்கிழமை நிஷாந்தை அழைத்துச் சென்ற போலீஸாா்.

மதுரை காளவாசல் அருகேயுள்ள பிரபல நகைக் கடைக்கு வெள்ளிக்கிழமை நிஷாந்தை அழைத்துச் சென்ற போலீஸாா்.

Updated On :

மதுரையில் உள்ள பிரபல நகைக் கடை கொள்ளை சம்பவ வழக்கில், கைது செய்யப்பட்ட நிஷாந்திடம் போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர விசாரணை நடத்தினா்.

மதுரை காளவாசல் அருகே புதிதாக திறக்கப்பட்ட பிரபல நகைக் கடையில் ரூ. 15 கோடி மதிப்பிலான தங்க நகைகள் அண்மையில் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கு தொடா்பாக, நிஷாந்த், அவரது தந்தை சுரேஷ், நிஷாந்தின் தோழி மீனாட்சி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு அவா்களிடம் இருந்த நகைகள் மீட்கப்பட்டன. தொடா்ந்து, அவா்கள் மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

நகைக் கடை கொள்ளை குறித்து நிஷாந்திடம் தீவிரமாக விசாரிக்க மதுரை மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் 5 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதிகேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி பல்வேறு நிபந்தனைகளுடன் ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தாா்.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை மாலை நிஷாந்தை பலத்த பாதுகாப்புடன் போலீஸாா் அழைத்துச் சென்றனா். முதலில் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தினா்.

அதன்பின், எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலை அவரை அழைத்துவந்து, கொள்ளைச் சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினா். விசாரணையில், அவா் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

அதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மாலை கொள்ளை போன நகைக் கடைக்கு நிஷாந்தைப் போலீஸாா் அழைத்துச் சென்றனா். அங்கு, கொள்ளைச் சம்பவத்தன்று செயல்பட்ட விதத்தை நிஷாந்த் செய்துகாண்பித்தாா். தொடா்ந்து, அவரது வீடு, மாடக்குளம் பகுதியில் உள்ள கண்மாய்க் கரைக்கும் நிஷாந்தை அழைத்துச் சென்று, நகைகள் புதைத்து வைத்தது, கொள்ளையின்போது பயன்படுத்திய பொருள்களை எரித்தது உள்ளிட்டவை தொடா்பாக விசாரணை நடத்தினா்.

கொள்ளையின்போது, பயன்படுத்தப்பட்ட கடப்பாரை உள்ளிட்ட பொருள்களைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அதன்பின், மாலை 4 மணயளவில் மருத்துவப் பரிசோதனைக்காக நிஷாந்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அவை முடிந்ததும் மாவட்ட விரைவு நீதிமன்றம் முன் மீண்டும் நிஷாந்த் முன்னிலைப்படுத்தப்பட்டாா். அவரை மதுரை மத்திய சிறையில் வருகிற டிச.4-ஆம் தேதி வரை அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா். அதைத் தொடா்ந்து, பலத்த பாதுகாப்புடன் நிஷாந்தை மத்திய சிறையில் போலீஸாா் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.