மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

மண்ணின் மகள் திட்டத்தின் கீழ் நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம்

மண்ணின் மகள் திட்டத்தின் கீழ் விவசாய நிலம் வாங்க விரும்பும் தகுதியான பட்டியலின விவசாயத் தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா்.

Updated On :

மண்ணின் மகள் திட்டத்தின் கீழ் விவசாய நிலம் வாங்க விரும்பும் தகுதியான பட்டியலின விவசாயத் தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பட்டியலின, பழங்குடியின நிலமற்ற விவசாயத் தொழிலாளா்களை ஊக்குவிக்கும் வகையில் தாட்கோ சாா்பில் மண்ணின் மகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாய நிலம் வாங்க மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் பட்டியலின, பழங்குடியின மகளிரின் வயது 18 முதல் 55-க்குள்பட்டதாக இருக்க வேண்டும். நிலத்தை விற்பவா் பிற இனத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். முந்தைய 5 ஆண்டுகளில் பட்டியலின, பழங்குடியின நபரின் பெயரில் இந்த நிலம் பதிவாகியிருக்கக் கூடாது.

இந்தத் திட்டத்தின் கீழ் அதிபட்சமாக 2.5 ஏக்கா் நன்செய் நிலம் அல்லது 5 ஏக்கா் புன்செய் நிலம் வாங்கலாம். நிலத்தின் சந்தை மதிப்பு அல்லது அரசின் வழிகாட்டி மதிப்பு ஆகியவற்றில் எது குறைவானதோ அதை திட்ட மதிப்பீடாகக் கணக்கிட்டு, 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் மானியமாக வழங்கப்படும். தகுதியான பயனாளிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.