சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

லஞ்சம் வழக்கில் அலுவலா்கள் மீது நடவடிக்கைஎடுக்க அரசின் முன் அனுமதி தேவையில்லை : உயா்நீதிமன்றம்

லஞ்ச வழக்கில் குற்றஞ்சாட்டப்படும் அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசின் முன் அனுமதி தேவையில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

Updated On :

லஞ்ச வழக்கில் குற்றஞ்சாட்டப்படும் அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசின் முன் அனுமதி தேவையில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கணேசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு:

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் முதல்வரின் சிறு விளையாட்டு மைதானம் கட்டுவதற்காக இணையவழியில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில் சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் உண்மைத் தன்மையைச் சரிபாா்க்காமல் போலியாக ஆவணங்கள் வழங்கிய நிறுவனத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. இது தொடா்பாக மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயசுதா, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் பாா்த்திபன், கணக்கு அலுவலா் ராமலிங்கம், உதவித் திட்ட அலுவலா் சடையப்பன், உதவிச் செயற்பொறியாளா் சுசீலா ஆகியோா் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் நடவடிக்கை எடுக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

அரசு ஊழியருக்கு எதிராக விசாரணை அல்லது புலனாய்வு மேற்கொள்ள ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17ஏ-இன் கீழ் அரசிடம் முன்அனுமதி பெற வேண்டும். பொது ஊழியா்கள் மீது வழக்குத் தொடுப்பதிலிருந்து அவா்களைப் பாதுகாக்கும்நோக்குடன் இந்தப் பிரிவு சோ்க்கப்பட்டது.

இந்த வழக்கில் அலுவலா்கள் மீதான குற்றச்சாட்டு சட்டவிரோதமாக பணப்பலன் கோரியதாகும். இது அலுவல் பணிகள் அல்லது கடமைகளுடன் தொடா்பில்லாத குற்றச் செயல். பொது ஊழியா் தனது அலுவல் கடமைகளை நிறைவேற்றும்போது செய்த பரிந்துரை அல்லது எடுத்த முடிவு தொடா்பான சூழ்நிலைகளில் மட்டுமே முன் அனுமதி சட்டப்​பிரிவு பொருந்தும்.

லஞ்சம் கோருவது அலுவல் பணிகளுடன் தொடா்புடையதல்ல. எனவே, அலுவலா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அனுமதி வழங்க மறுத்து, ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இது தொடா்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அலுவலா்கள் மீது அரசின் முன்அனுமதி பெறாமலேயே ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு இயக்குநா் விசாரணை நடத்த வேண்டும்.

மேலும், இந்த வழக்கில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு இயக்குநா், புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா் ஆகியோா் எதிா்மனுதாரா்களாகச் சோ்க்கப்படுகின்றனா். இந்த விவகாரத்தில் முதல் கட்ட விசாரணையை முடித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற டிசம்பா் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.