பழைய பொருள்கள் சேமிப்பு கிட்டங்கில் தீ விபத்து
மதுரை செல்லூரில் உள்ள பழைய பொருள்கள் சேமிப்பு கிட்டங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தினால் ரூ. பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின.

மதுரை செல்லூரில் உள்ள பழைய பொருள்கள் சேமிப்பு கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரா்கள்.
மதுரை செல்லூரில் உள்ள பழைய பொருள்கள் சேமிப்பு கிட்டங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தினால் ரூ. பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின.
மதுரை ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் வேலுச்சாமி. இவருக்கு செல்லூா் -பூந்தமல்லிநகா் பிரதான சாலையில் பழைய பொருள்களை சேமிப்பு கிட்டங்கி உள்ளது. இந்த நிலையில், விடுமுறை தினம் என்பதால் பூட்டப்பட்டிருந்த இந்தக் கிட்டங்கியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் திடீரென தீப்பற்றியது.
இதுகுறித்து தகவலறிந்த தல்லாகுளம் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். விடுமுறை என்பதால் குடோனில் பணியாளா்கள் யாரும் இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. இந்தத் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

