6,922 பேருக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி
மதுரை மாநகராட்சிப் பகுதியில் 6,922 பேருக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கோப்புப் படம்
மதுரை மாநகராட்சிப் பகுதியில் 6,922 பேருக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தியாவில் ஆண்டுக்கு சுமாா் 80,000 போ் கா்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனா். இவா்களில் 35,000 போ் உயிரிழக்கின்றனா். இந்தப் புற்றுநோய்க்கு முக்கியக் காரணம் எச்பிவி எனும் வைரஸ் தொற்றாகும். இந்தத் தொற்று ஏற்படுவதற்கு முன்பே, இளம் வயதிலேயே தடுப்பூசி செலுத்திக் கொள்வதே இந்த நோயிலிருந்து பெண்களைப் பாதுகாக்க முடியும்.
நாடு முழுவதும் 14 வயது பெண் குழந்தைகளுக்கான மனித பாப்பிலோமா வைரஸ்(எச்பிவி) தடுப்பூசி இயக்கம் தற்போது நடைபெற்று வருகிறது. கா்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், இந்தத் திட்டம் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. ஆண்டுதோறும் 14 வயதை எட்டும் சுமாா் 1.15 கோடி பெண் குழந்தைகள் இதன் மூலம் பயனடைவா்.
மதுரை மாநகராட்சியைப் பொருத்தவரை, அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் உள்ளிட்ட 14 வயது பெண் குழந்தைகளுக்கு, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் 9,953 பெண் குழந்தைகள் 14 வயதுக்கு உள்பட்டவராக கணக்கெடுக்கப்பட்டது. இவா்களில் வியாழக்கிழமை (நவ. 26) வரை 6,922 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. எஞ்சியவா்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, 14 வயது பெண் குழந்தைகளின் பெற்றோா்கள் இந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மதுரை மாநகரில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவிகள், தங்கள் பள்ளி அருகேயுள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நல்வாழ்வு மையத்தில் சென்று இந்தத் தடுப்பூசியை இலவசமாகப் செலுத்திக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

