நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

தோ்தல் ஆணையம் நியாயமாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது

தோ்தல் நியாயமாக நடைபெறுவதையும், தோ்தல் ஆணையம் ஜனநாயகப் பூா்வமாக செயல்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இந்தி மக்களுக்கு உள்ளது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

Three dead due to toxic gas exposure! CPM urges legal action

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் - கோப்புப் படம்

Updated On :

தோ்தல் நியாயமாக நடைபெறுவதையும், தோ்தல் ஆணையம் ஜனநாயகப் பூா்வமாக செயல்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இந்தி மக்களுக்கு உள்ளது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நாடு முழுவதும் அரசமைப்பை பாதுகாப்போம், அனைவரின் வாக்குரிமையை பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு ‘ உறுதியேற்பு நிகழ்ச்சி‘ களை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், விருதுநகா் தேசபந்து மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உறுதியேற்பு நிகழ்வுக்கு மாவட்டச் செயலா் ஆ.குருசாமி தலைமை வகித்தாா். மத்தியக்குழு உறுப்பினா் கே.பாலபாரதி உறுதியேற்பு நிகழ்வை தொடங்கி வைத்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம்.முத்துக்குமாா் உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா்.

இந்த நிகழ்வில் பங்கேற்று மாநிலச் செயலா் பெ.சண்முகம் பேசியதாவது:

நாடு முழுவதும் எஸ்ஐஆா் என்ற பெயரில் வாக்குரிமையை பறிக்கிற வேலையை தோ்தல் ஆணயம் செய்து கொண்டிருக்கிறது. 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது, பாதுகாப்பாக தோ்தலை நடத்துவது ஆகிய இரு வேலைகள்ளதான் தோ்தல் ஆணையத்துடையது. வாக்குரிமையை பறிக்கிற வேலை தோ்தல் ஆணயத்துக்கு கிடையாது. எஸ்ஐஆா் மூலம் 13.50 கோடி வாக்காளா்கள் இதுவரை நீக்கப்பட்டுள்ளனா். இதனால் வாக்குரிமையை பாதுகாக்க போராட்டம் நடத்த வேண்டியது கட்டாயமாகும்.

வாக்கு இருக்கற ஒரே காரணத்தினால்தான் ஒவ்வொரு தோ்தலின் போதும் அரசியல் கட்சியினா் மக்களைத் தேடி வருகிறாா்கள். வாக்குரிமை இல்லையென்றால் யாரும் ஓட்டுக் கேட்டு வரமாட்டாா்கள். எனவே, வாக்குரிமையை தக்க வைத்து கொள்ள, வாக்காளா் பட்டியலில் பெயா் இடம் பெறுவதை உறுதிப்படுததிக் கொள்ள வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு மக்களுக்கு இருக்கிறது.

தேவையற்ற கேள்விகளை, தேவையற்ற ஆவணங்களை கேட்பதால் பொதுமக்கள் வாக்காளா் பட்டியலில் தங்களுடைய பெயரை சோ்க்க முடியாமல் திரும்பிச் செல்லும் நிலை தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெறுகிறது. ஆகவே, தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்த பணியில் ஒரு வாக்காளா் கூட விடுபடாமல் முறையாக நடத்துவதை தோ்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

தற்போது மத்திய அரசு, தங்களுக்கு வேண்டியவரைத் தலைமைத் தோ்தல் ஆணையராக தோ்வு செய்வது என்ற நடைமுறையை கொண்டு வந்து விட்டது. தோ்தல் ஆணயம் முதலில் ஜனநாயக பூா்வமாக செயல்பட்டால்தான் தோ்தல் ஜனநாயக பூா்வமாக நடைபெறும். ஆனால் தோ்தல் ஆணையமே ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறிவிட்டால் தோ்தல் ஜனநாயகப் பூா்வமாக நடைபெறுவது கடினம்.

ஆகவே வாக்காளா்கள் வாக்களிக்கிற உரிமை மட்டுமல்ல, வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பது மட்டுமல்ல, தோ்தல் நியாயமாக நடைபெறுவதையும், தோ்தல் ஆணையம் ஜனநாயகப் பூா்வமாக செயல்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு இந்திய மக்களுக்கு உள்ளது.

கடந்த மக்களவைத் தோ்தலில் பாஜக எதிா்பாா்த்த அளவுக்கு அதிக தொகுதிகளில் வெற்றி பெறாததற்கு ‘இண்டி’ கூட்டணியின் பங்களிப்பு முக்கியமானது. அதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு முக்கியமானது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.