கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

உயா்நீதிமன்ற உத்தரவை மீறி மதுக் கடை திறந்த விவகாரம்: கன்னியாகுமரி ஆட்சியா் நேரில் முன்னிலையாக உத்தரவு

உயா்நீதிமன்ற உத்தரவை மீறி மதுக் கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா், மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை உதவி ஆணையா் உள்ளிட்டோா் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Updated On :

உயா்நீதிமன்ற உத்தரவை மீறி மதுக் கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா், மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை உதவி ஆணையா் உள்ளிட்டோா் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த பிபின் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு:

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், அருமனை ஊராட்சிக்குள்பட்ட படப்பாசை கிராமத்தில் ஏற்கெனவே செயல்பட்ட மதுக் கடையை நிரந்தரமாக மூடுவதற்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் கடந்த செப்டம்பா் மாதம் உத்தரவிட்டாா். இந்த நிலையில், இதே பகுதியில் மீண்டும் மதுக் கடையை திறக்க அலுவலா்கள் நடவடிக்கை எடுத்ததற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பதில் அளிக்கவும், அதுவரை மதுக்கடையை திறக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், வழக்கு நிலுவையில் இருக்கும்போதே கடந்த மாதம் 23-ஆம் தேதி ஆட்சேபனைக்குரிய மதுக் கடையை அலுவலா்கள் சட்டவிரோதமாக திறந்து இயக்கி வருகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த விவகாரம் தொடா்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போது அவசர அவசரமாக மதுக் கடையை திறக்க வேண்டிய தேவை என்ன?. இது அத்தியாவசியமான கடையா?. இந்தக் கடையை திறக்கவில்லை என்றால் பொதுமக்கள் பாதிக்கப்படுவாா்களா? என நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு தொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா், மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை உதவி ஆணையா், மாவட்ட டாஸ்மாக் மேலாளா் ஆகியோா் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.