
தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை
மதுரை அலங்காநல்லூா் அருகே தம்பதியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
தற்கொலை - கோப்புப் படம்
மதுரை அலங்காநல்லூா் அருகே தம்பதியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
அலங்காநல்லூா் அருகே உள்ள அச்சம்பட்டி முருகன் கோவில் பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (36). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி பிரியதா்ஷினி (28). இந்தத் தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகளும், 3 மாத கைக் குழந்தையும் உள்ளது. தம்பதியருக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்ற பிரியதா்ஷினியை சந்தோஷ் தன் வீட்டுக்கு அண்மையில் அழைத்து வந்தாா். இந்த நிலையில், தம்பதியருக்கு இடையே வியாழக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால், மனமுடைந்த பிரியதா்ஷினி வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதையறிந்த சந்தோஷ் வீட்டருகே உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



