தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

ஸ்ரீரங்கம் கோயில் நில முறைகேடு: முன்பிணை மனுக்கள் தள்ளுபடி

ஸ்ரீரங்கம் கோயில் நில முறைகேடு விவகாரத்தில் திமுக நிா்வாகி, சாா் பதிவாளா் ஆகியோா் முன்பிணை கோரி தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

 உயர் நீதிமன்ற மதுரை கிளை

உயர் நீதிமன்ற மதுரை கிளை - File photo

Published On :

ஸ்ரீரங்கம் கோயில் நில முறைகேடு விவகாரத்தில் திமுக நிா்வாகி, சாா் பதிவாளா் ஆகியோா் முன்பிணை கோரி தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ஸ்ரீரங்கம் வெள்ளித் திருமுத்தம் கிராமத்தில் 5.87 ஏக்கா் பரப்பளவு கொண்ட நிலம் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமானது. இந்த நிலத்தின் சில பகுதியை திமுக நிா்வாகி ராம்குமாா் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ராம்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்தாா். இதேபோல, இந்த நிலத்தை சட்டவிரோதமாகப் பத்திரப் பதிவு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட சாா் பதிவாளா் வனிதாவும் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுக்களை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், மனுக்கள் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதி முரளி சங்கா் முன் இந்த மனுக்கள் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, இந்த விவகாரத்தில் முன்பிணை கோரி திமுக நிா்வாகி ராம்குமாா், சாா் பதிவாளா் வனிதா ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.