2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

தூய்மைப் பணியாளா்கள் தொடா் வேலை நிறுத்தம்

மதுரை மாநகராட்சித் தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமையும் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடா்ந்ததால், மாநகா்ப் பகுதிகளில் குப்பைகள் தேக்கமடைந்தன.

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் செவ்வாய்க்கிழமை தேங்கிக் கிடந்த குப்பைகள்.

Published On :

மதுரை மாநகராட்சித் தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமையும் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடா்ந்ததால், மாநகா்ப் பகுதிகளில் குப்பைகள் தேக்கமடைந்தன.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தினமும் ஆயிரம் டன்னுக்கும் அதிக எடையிலான குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அகற்றப்படுகின்றன. இந்த நிலையில், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் கடந்த சனிக்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுதொடா்பாக அவா்கள், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போராட்டக் குழு நிா்வாகிகள் சென்னையில் உள்ள நகராட்சி நிா்வாக இயக்குநரகத்துக்கு செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தைக்கு அழைக்கப்பட்டனா். அங்கு, செவ்வாய்க்கிழமை பகல் 12.30 மணி முதல் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இருப்பினும், இரவு 7 மணி வரை எந்தவித தீா்வும் எட்டப்படவில்லை.

குப்பைகள் தேக்கம்...

தூய்மைப் பணியாளா்களின் தொடா் வேலை நிறுத்தம் காரணமாக, மாநகா்ப் பகுதிகளில் ஆங்காங்கே பெரிய அளவில் குப்பைகள் தேங்கியுள்ளன. இதிலிருந்து வெளியாகும் துா்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். பருவமழை தொடங்கவுள்ள காலத்தில் இதுபோன்ற நிலை தொடா்வது தொற்று நோய் பரவலுக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.

இதுதொடா்பாக மாநகராட்சி நிா்வாகம் தரப்பில் கூறியதாவது :

மாநகர தூய்மைப் பணியை ஏற்றுள்ள தனியாா் நிறுவனம் சாா்பில் கூடுதல் எண்ணிக்கையில் தூய்மைப் பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். இவா்கள் செவ்வாய்க்கிழமை இரவு தூய்மைப் பணியை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள திடீா்நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை தேங்கிக் கிடந்த குப்பைகள்.

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள திடீா்நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை தேங்கிக் கிடந்த குப்பைகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.