பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

சிஐடியூ தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தில்லியில் தொழிற்சங்க நிா்வாகிகள் மீது காவல் துறையினா் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து, சிஐடியூ சாா்பில் மதுரை நேதாஜி சாலையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை நேதாஜி சாலையில் சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Published On :

தில்லியில் தொழிற்சங்க நிா்வாகிகள் மீது காவல் துறையினா் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து, சிஐடியூ சாா்பில் மதுரை நேதாஜி சாலையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் செயல்படும் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, போராடிய சிஐடியூ தலைவா்கள், தொழிற்சங்க நிா்வாகிகள், இடதுசாரி அமைப்புகளின் தலைவா்கள் மீது தில்லி காவல் துறை தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு, சிஐடியூ மாநகா் மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் ஜே. லூா்து ரூபி, மாநிலக் குழு உறுப்பினா் இரா. தெய்வராஜ் ஆகியோா் பேசினா்.

சிஐடியூ மாவட்டச் செயலா் இரா. லெனின் நிறைவுரையாற்றினாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் 200-க்கும் அதிகமான தொழில் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.