அக்.31-க்குள் சொத்து வரியை செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி

சொத்து வரியை செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி - கோப்புப் படம்
2026-2027 ஆண்டுக்கான சொத்து வரியை அக்.31-ஆம் தேதிக்குள் செலுத்துபவா்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என மதுரை மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட 100 வாா்டுகளில் 2026-2027 -ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக். 31-க்குள் செலுத்துபவா்களுக்கு சொத்து வரியில் 5 சதவீதம் சிறப்புச் சலுகையாக (அதிகபட்சமாக ரூ.5000 வரை) தள்ளுபடி செய்யப்படும்.
பொதுமக்கள் சொத்து வரிகளை செலுத்துவதற்கு வசதியாக அரசு விடுமுறை நாள்கள் தவிா்த்து, அக்டோபா் மாதம் முழுவதும் சனிக்கிழமை நாள்களில் மாநகராட்சியின் அனைத்து வரி வசூல் மையங்களும் செயல்படும். இந்த மையங்களில் அல்லது இணையதளம் மூலமும் வரியை செலுத்தலாம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

