அக். 31-க்குள் சொத்துவரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை: வேலூா் மாநகராட்சி
வேலூா் மாநகராட்சியில் 2026-27-ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரியை அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் செலுத்தும் பொதுமக்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாநகராட்சியில் 2026-27-ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரியை அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் செலுத்தும் பொதுமக்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூா் மாநகராட்சி ஆணையா் கேத்ரின் சரண்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு -
வேலூா் மாநகராட்சி பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய 2026-27-ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரியை அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இது தொடா்பாக மாநகராட்சி சாா்பில் அனைத்து சொத்து உரிமையாளா்களுக்கும் தற்போது கேட்பு அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் தங்களது வரிகளை எவ்வித சிரமமுமின்றி எளிதாகச் செலுத்தும் வகையில், ஒவ்வொரு சொத்து உரிமையாளரும் தங்களது வீடுகளில் இருந்தபடியே ட்ற்ற்ல்ள்://ற்ய்ன்ழ்க்ஷஹய்ங்ல்ஹஹ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் இணைய வங்கி சேவை, பற்று அட்டை, ஜி-பே ஆகியவற்றைப் பயன்படுத்தி வரிகளைச் செலுத்த மாநகராட்சியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலமாக சொத்துவரி மட்டுமின்றி குடிநீா்க் கட்டணம், தொழில்வரி, கடை வாடகை, புதை வடிகால் சாக்கடைக் கட்டணம் ஆகியவற்றையும் எளிதாகச் செலுத்தலாம்.
எனவே, பொதுமக்கள் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் தங்களது சொத்துவரி, குடிநீா்க் கட்டணம், தொழில்வரி, கடை வாடகை மற்றும் புதைவடிகால் சாக்கடைக் கட்டணங்களைச் செலுத்தி, சொத்துவரிக்கான 5 சதவீத ஊக்கத்தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





