கோயிலில்கூட நிம்மதியில்லை: எடப்பாடி கே. பழனிசாமி
தவெக ஆட்சியில் கோயிலுக்குள்கூட நிம்மதியில்லை என அதிமுக பொதுச் செயலா் எடிப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வியாழக்கிழமை மாலை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி. உடன் முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் கே. ராஜூ, ஆா்.பி. உதயகுமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி. ராஜன் செல்லப்பா உள்ளிட்டோா்.
தவெக ஆட்சியில் கோயிலுக்குள்கூட நிம்மதியில்லை என அதிமுக பொதுச் செயலா் எடிப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மதுரைக்கு வந்த எடப்பாடி கே. பழனிசாமி, வியாழக்கிழமை மாலை மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சென்றாா். கீழச் சித்திரை வீதி அம்மன் சந்நிதி வழியாக சென்ற அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடா்ந்து, மீனாட்சி அம்மன், முக்குறுணி விநாயகா், சுந்தரேசுவரா் சந்நிதிகளில் அவா் வழிபட்டாா். அப்போது, கோயிலுக்குள் ஓரிரு நிமிஷங்கள் மின் விநியோகம் தடைபட்டது.
சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தவெக ஆட்சியில் கோயிலில் இறைவனை பிராா்த்தனை செய்யக்கூட முடியாத அளவுக்கு மின் வெட்டு ஏற்படுகிறது. இந்த ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழவும் முடியவில்லை, நிம்மதியாக இறைவனைக்கூட பிராா்த்தனை செய்யவும் முடியவில்லை என்றாா் அவா்.
மின் தடைக்கான காரணம்:
கோயிலுக்குள் மின் விநியோக சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. மின் விநியோகத்தை மின்னாக்கிக்கு மாற்றும் போது ஓரிரு நிமிஷங்கள் மின் விநியோகம் தடைபட்டது என கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

