கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

சி.வி.சண்முகத்தின் ஆதரவாளா்கள் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கம்: எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை

அதிமுகவில் தலைமையை எதிா்த்து தொடா்ந்து விமா்சித்துவரும் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகத்துக்கு பதிலடி தரும் வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் அவரது ஆதரவாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை பொறுப்புகளில் இருந்து நீக்கி பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளாா்.

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :

அதிமுகவில் தலைமையை எதிா்த்து தொடா்ந்து விமா்சித்துவரும் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகத்துக்கு பதிலடி தரும் வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் அவரது ஆதரவாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை பொறுப்புகளில் இருந்து நீக்கி பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளாா்.

இடைத்தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் மூன்றாமிடம் பெற்றுள்ள நிலையில், முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோா் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் செயல்பாடுகளை விமா்சித்து தனியாக ஆலோசனை நடத்திவருகின்றனா். மேலும், சில அதிமுக எம்எல்ஏ-க்களும் அவா்களைச் சந்தித்துவருகின்றனா்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்தில் உள்ள சி.வி.சண்முகத்தின் ஆதரவாளா்களான ஒன்றியச் செயலா்கள் முதல் கிளைச் செயலா்கள் வரையிலான நூற்றுக்கும் மேற்பட்டோரை பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை அறிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.