பராமரிப்புப் பணிகள்: மதுரை ரயில்வே கோட்டத்தில் ரயில் சேவைகளில் இன்று முதல் மாற்றம்!
மதுரை ரயில்வே கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதையொட்டி, சில ரயில் சேவைகளில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு ரயில் - கோப்புப் படம்
மதுரை ரயில்வே கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதையொட்டி, சில ரயில் சேவைகளில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மதுரை ரயில்வே கோட்டத்தில் தண்டவாளப் பராமரிப்பு, புதுப்பித்தல் பணிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 1) முதல் சில ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, 3 ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளன. 6 ரயில்கள் பகுதியளவிலும், 2 ரயில்கள் முழு அளவிலும் ரத்து செய்யப்படுகின்றன. இதன் விவரம்:
பாதை மாற்றம்: குருவாயூா்-தாம்பரம் விரைவு ரயில் (16128) நவ.1, 3, 10, 12, 15, 17, 19, 22, 24, 26, 29, டிச.1, 3, 6 ஆகிய தேதிகளிலும், நாகா்கோவில்-கோவை விரைவு ரயில் (16321) நவ. 2, 4, 11, 13, 16, 18, 20, 23, டிச. 4, 7 ஆகிய தேதிகளிலும் விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். இந்த ரயில்கள் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயில் ( 56772) நவ. 2, 4, 11, 13, 16, 18, 20, 23, டிச. 4, 7 ஆகிய தேதிகளில் விருதுநகா், மானாமதுரை சந்திப்பு வழியாக மதுரை சந்திப்பை அடையும். இந்த ரயில் மானாமதுரை, மதுரை கிழக்கு ரயில் நிறுத்தங்களில் நின்று செல்லும்.
பகுதி ரத்து: மதுரை-ராமேசுவரம் பயணிகள் ரயில் (56711) நவ. 5, 12-ஆம் தேதிகளில் ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் ராமநாதபுரத்துடன் நிறுத்தப்படும். மதுரை-ராமேசுவரம் பயணிகள் ரயில் (56711) நவ. 19, 20, 21, 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் மண்டபம்-ராமேசுவரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் மண்டபத்துடன் நிறுத்தப்படும்.
ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரயில் (56714) நவ. 5, 12-ஆம் தேதிகளில் ராமேசுவரம்-ராமநாதபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் ராமநாதபுரத்திலிருந்து மதுரைக்கு இயக்கப்படும். ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரயில் (56714) நவ. 19, 20, 21, 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் ராமேசுவரம்-மண்டபம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் மண்டபத்திலிருந்து மதுரைக்கு இயக்கப்படும்.
செங்கோட்டை-திருநெல்வேலி பயணிகள் ரயில் (56742) நவ. 26, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் சேரன்மகாதேவி-திருநெல்வேலி சந்திப்பு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயில் (56743) நவ. 26, 27, 28, 29 30 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி சந்திப்பு- சேரன்மகாதேவி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் சேரன்மகாதேவியிலிருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும்.
முழுமையாக ரத்து: திருச்செந்தூா்-திருநெல்வேலி (56004), திருநெல்வேலி-திருச்செந்தூா் (56003) ரயில்கள் நவ. 26,27,28,29,30 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

