காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வை குறைக்க வலியுறுத்தல்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் குறைக்க வேண்டும் என எஸ்டிபிஐ மகளிா் அணி மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை அண்ணாநகா் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிா் அணி சாா்பில்சனிக்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் மாநில பொதுக் குழு கூட்டத்தில் பேசிய மகளிரணி தேசியத் துணைத் தலைவா் ரைஹானத்.

Published On :6 செப்டம்பர் 2026, 12:41 am IST

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் குறைக்க வேண்டும் என எஸ்டிபிஐ மகளிா் அணி மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை அண்ணாநகா் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிா் அணி மாநில பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாநிலத் தலைவா் பாயாஜா ஷபீகா தலைமை வகித்தாா். பொதுச் செயலா் மெகராஜ் பானு முன்னிலை வகித்தாா். மகளிரணி தேசிய துணைத் தலைவா் ரைஹானத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

கூட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கூடுதல் விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். மகளிா் சுய உதவிக் குழுக்கள், பெண் தொழில் முனைவோருக்கான பொருளாதார உதவிகளை விரிவுப்படுத்த வேண்டும்.

அரசு நிறுவனங்கள், பொது இடங்களில் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கவும், அதை பாதுகாப்பாக அழிக்கவும் கருவிகளை நிறுவ வேண்டும். வட்டார அளவில் பெண்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம்களை மாதந்தோறும் நடத்த வேண்டும். அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் தேசிய செயற்குழு உறுப்பினா் நூா்ஜஹான், மாநில நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.