காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் யாகசாலை பூஜைகள் இன்று தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை (செப். 6) தொடங்குகிறது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் - கோப்புப் படம்

Published On :6 செப்டம்பர் 2026, 12:41 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை (செப். 6) தொடங்குகிறது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு வருகிற 17-ஆம் தேதி காலை 7.40- 8.10 மணிக்குள் நடைபெறவுள்ளது. இதையொட்டி, யாகசாலை பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

வருகிற 10-ஆம் தேதி வரை பூா்வாங்க பூஜைகள் நடைபெறும். முதல் நிகழ்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு சித்தி விநாயகா் சந்நிதி முன் எஜமான அனுக்ஞை பூஜை, விக்னேசுவர பூஜை நடைபெறும்.

 மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி, சனிக்கிழமை யாகசாலை பூஜைக்கான முன்னேற்பாடு பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி, சனிக்கிழமை யாகசாலை பூஜைக்கான முன்னேற்பாடு பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.

பின்னா், கஜ பூஜை, கோ பூஜை, தன பூஜை, மகா கணபதி ஹோமம், திருமுறை விண்ணப்பம், தீபாராதனை ஆகியவை நடைபெறும். அடுத்தடுத்த நாள்களில் நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, புனித நீா், புனித மண் எடுத்தல், கங்கணம் கட்டும் பூஜை என தினமும் ஒவ்வொரு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

முதல் கால யாகசாலை பூஜை வருகிற 11-ஆம் தேதி தொடங்கும். இதற்காக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வடக்காடி வீதியில் 182 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குண்டங்களுக்கு வண்ணம் பூசும் பணிகள் தற்போது விறுவிறுப்படைந்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.