சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

திறன் போட்டியில் பங்கேற்க இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய திறன் போட்டியில் பங்கேற்க விரும்பும் இளைஞா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

application

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Published On :9 செப்டம்பர் 2026, 1:49 am IST

இந்திய திறன் போட்டியில் பங்கேற்க விரும்பும் இளைஞா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா வெளியிட்ட செய்திக் குறிப்பு :

2028-ஆம் ஆண்டு உலக திறன் போட்டிகள் ஜப்பானில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் போட்டியாளா்களைத் தோ்வு செய்வதற்கான இந்திய திறன் போட்டிகள் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதற்கான இணையதள பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

16 வயது முதல் 25 வயதுக்கு உள்பட்ட மாணவா்கள் தொழில் பயிற்சி பெறுபவா்கள், இளம் தொழில் முனைவோா் தங்களின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் 60-க்கும் மேற்பட்ட திறன் பிரிவுகளில் போட்டியில் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்க விரும்பும் தகுதியான தமிழகத்தை சோ்ந்த இளைஞா்கள் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ண்ய்க்ண்ஹக்ண்ஞ்ண்ற்ஹப்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளத்தில் வருகிற வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 94990 55748, 98433 72096 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.