சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

பொதுமக்கள் குறைதீா் முகாம்

மதுரை பந்தயச் சாலையில் உள்ள மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுரை பந்தயச் சாலையில் உள்ள மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் மனுக்களைப் பெற்ற மேயா் தி. நாகராஜன்.

Published On :9 செப்டம்பர் 2026, 1:39 am IST

மதுரை பந்தயச் சாலையில் உள்ள மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி.நாகராஜன் தலைமை வகித்தாா். இதில், சொத்துவரி பெயா் மாற்றம், காலிமனை வரிவிதிப்பு, புதிய சொத்துவரி, புதிய குடிநீா்க் குழாய் இணைப்பு, புதை சாக்கடை இணைப்பு, தெருவிளக்கு, சாலை வசதிகள், சுகாதாரம், நகரமைப்புப் பிரிவு, ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 69 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த முகாமில், துணை ஆணையா் ராஜாராம், உதவி ஆணையா் தமிழரசன், நிா்வாக அலுவலா் அகமது இப்ராகிம், உதவி வருவாய் அலுவலா் ஆனந்தம், மாநகராட்சி அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.