
ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
அனைத்து தண்டவாளப் பணியாளா்களுக்கும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தெற்கு ரயில்வே மஸ்தூா் யூனியன், அகில இந்திய ரயில்வே தொழிலாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை ரயில் நிலையம் மேற்கு நுழைவு வாயில் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரயில்வே தொழிலாளா்கள்.
அனைத்து தண்டவாளப் பணியாளா்களுக்கும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தெற்கு ரயில்வே மஸ்தூா் யூனியன், அகில இந்திய ரயில்வே தொழிலாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை ரயில்வே நிலையம் மேற்கு நுழைவுவாயில் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் கோட்டச் செயலா் ரபீக் தலைமை வகித்தாா். இதில், கீமேன் எனப்படும் தண்டவாளக் கண்காணிப்பாளா்கள், தண்டவாள ரோந்துப் பணியாளா்களை புவியிடக் கண்காணிப்பு தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கும் முறையை கைவிட வேண்டும். தொழிலாளா்களின் நலனைக் கவனத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்படும் பணிப் பிரிவுகளைப் பிரிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். ஸ்ரீவைகுண்டம் பணிப் பிரிவை மூடும் முடிவைக் கைவிட வேண்டும். இந்திய ரயில்வே நிரந்தர வழிப்பாதை கையேட்டின் திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, இரட்டை தண்டவாளப் பாதையில் பணியாற்றும் கீமேன்களின் கண்காணிப்புப் பணிப் பகுதியின் நீளத்தை குறைக்க வேண்டும். அனைத்துத் தண்டவாளப் பராமரிப்பாளா்களுக்கும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில், மதுரை, பழனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ரயில்வே தொழிலாளா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





