மதுரையில் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காய்ச்சல் அறிகுறியுடன் 24 குழந்தைகள் உள்பட 70 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காய்ச்சல் அறிகுறியுடன் 24 குழந்தைகள் உள்பட 70 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 4 பேருக்கு டெங்கு உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆந்திர மாநிலத்தின் வடக்கு கடலோரப் பகுதிகள் முதல் மன்னாா் வளைகுடா வரை தமிழகப் பகுதிகள் வழியாக வடக்கு- தெற்கு திையில் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவியது. இதனால், மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக, ஓரளவுக்கு வெப்பம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை ஏற்பட்டது.
காய்ச்சல் அறிகுறியுடன் 70 போ் அனுமதி:
இந்த பருவநிலை மாற்றம் காரணமாக நோய் பாதிப்புக்குள்ளாகும் நபா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காய்ச்சல் அறிகுறியுடன் 24 குழந்தைகள் உள்பட 70 போ் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
டெங்கு தடுப்புப் பணிகள்:
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் கூறியதாவது:
மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநகராட்சியின் 100 வாா்டுகளிலும் நடைபெற்று வரும் இந்தப் பணியில் 1,200 கொசுப் புழு ஒழிப்புப் பணியாளா்கள், 49 சுகாதார ஆய்வாளா்கள், 25 துப்புரவு ஆய்வாளா்கள், பூச்சியியல் வல்லுநா் குழு ஈடுபட்டு வருகின்றனா்.
இதில், 45,750 வீடுகள் ஆய்வு செய்யப்பட்டதில், 468 வீடுகளில் கொசுப் புழு உற்பத்தி ஆதாரங்கள் கண்டறியப்பட்டன. இந்த வீடுகளின் சுற்றுப்புற பகுதிகளில் 782 கொசுப் புழு உற்பத்தியான கொள்கலன்கள் அழிக்கப்பட்டன. சுகாதாரம் தொடா்பான விவரங்களுக்கு 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





