ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்: போராட்டத்தில் ஈடுபட்ட 304 போ் மீதான வழக்குகள் ரத்து

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றாததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 304 போ் மீதான வழக்குகளை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

 உயர் நீதிமன்ற மதுரை கிளை

உயர் நீதிமன்ற மதுரை கிளை - File photo

Published On :

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றாததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 304 போ் மீதான வழக்குகளை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த நல்லதம்பி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திருப்பரங்குன்றம் மலையில் காா்த்திகை தீபம் ஏற்றாததைக் கண்டித்து, நான் உள்பட 304 போ் கடந்த 2023-ஆம் ஆண்டு, நவம்பா் 25-ஆம் தேதி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டோம். இதையடுத்து, போலீஸாா் எங்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா். எனவே, இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஆா். விஜயகுமாா் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

இந்தப் போராட்டம் ஒரு ஜனநாயக ரீதியிலான போராட்டம். போராட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறோ, பொது சொத்துகளைச் சேதப்படுத்திய சம்பவங்களோ நடைபெறவில்லை என்றாா்.

இதையடுத்து, நீதிபதி விஜயகுமாா் பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரத்தில் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகவோ, பொது சொத்துகளுக்குச் சேதம் விளைவித்ததாகவோ எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.

இந்த நிலையில், இந்தப் போராட்டத்தை ஒரு குற்றச் செயலாகக் கருத முடியாது. போராட்டத்தில் ஈடுபட்ட மனுதாரா் உள்ளிட்ட 304 பேருக்கும் எதிராக குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடா்வது சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும். எனவே, மனுதாரா் உள்ளிட்ட 304 போ் மீதும் பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.