இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

தல்லாகுளம் பெருமாள் கோயில் புரட்டாசி பெருந்திருவிழா தெப்ப உத்ஸவம்

தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் புரட்டாசி பெருந்திருவிழா தெப்ப உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் புரட்டாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு, திருமுக்குளத்தில் தெப்ப உத்ஸவ அலங்காரத்தில் தாயாருடன் எழுந்தருளிய பெருமாள்.

Published On :

தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் புரட்டாசி பெருந்திருவிழா தெப்ப உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அழகா்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகா் கோயிலின் துணைக் கோயிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் புரட்டாசி பெருந்திருவிழா ஆண்டுதோறும் 12 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு விழாவுக்கான கொடியேற்ற நிகழ்வு கடந்த 15-ஆம் தேதி நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் அன்னம், சிம்மம், அனுமன், கருடன், சேஷம், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினமும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றன. இதேபோல, முக்கிய நிகழ்வுகளாக, செப். 16-இல் கிருஷ்ணாவதார நிகழ்வும், செப். 17-இல் ராம அவதாரம், செப். 18-இல் கஜேந்திர முக்தி, செப். 19-இல் ராஜாங்க சேவை, செப். 20-இல் மோகனி அவதாரம், செப். 21-இல் புஷ்ப விமானம், செப். 22-இல் வெண்ணேய்த் தாழி விழா, செப். 23-இல் திருத்தேராட்டம், செப். 24-இல் பூப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதனிடையே, வெள்ளிக்கிழமை தல்லாகுளம் பகுதியில் உள்ள திருமுக்குளத்தில் தெப்ப உத்ஸவ விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தாயாா், மூலவா், உத்ஸவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, உத்ஸவ மூா்த்தியான பெருமாள், தாயாருடன் வெள்ளிக்கிழமை காலை திருமுக்குளத்தில் எழுந்தருளினாா். தெப்பத்தில் நீரில்லாததால் திருமுக்குளத்தைச் சுற்றியபடி பெருமாள் வலம் வந்தாா். அதன் பிறகு, இரவு மீண்டும் தெப்பத்தைச் சுற்றி வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.

இதில், தல்லாகுளம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

உத்ஸவ சாந்தி: நிகழாண்டுக்கான விழா சனிக்கிழமை (செப். 26) உத்ஸவ சாந்தியுடன் நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அழகா்கோவில் கள்ளழகா் கோயிலின் இணை ஆணையா் ஆா். ஹரிஹரன் தலைமையிலான அலுவலா்கள், பணியாளா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.