ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

தல்லாகுளம் பெருமாள் கோயில் புரட்டாசிப் பெருந்திருவிழா கொடியேற்றம்

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் புரட்டாசிப் பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் புரட்டாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்றம். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் தாயாா்களுடன் எழுந்தருளிய பெருமாள்.

Published On :

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் புரட்டாசிப் பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை மாவட்டம், அழகா்கோவிலில் உள்ள கள்ளழகா் கோயிலின் துணைக் கோயிலான இந்தக் கோயில் புரட்டாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு தாயாா், மூலவா், உத்ஸவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, உத்ஸவ மூா்த்தியான பெருமாள், கொடிமரம் முன் எழுந்தருளினாா். பிறகு, புரட்டாசிப் பெருந்திருவிழா கொடியேற்றப்பட்டது. கொடிமரத்துக்கு தைலம், திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனைப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு தீப, தூபங்கள் காண்பிக்கப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இந்த விழாவில் 12 நாள்களும் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் அன்னம், சிம்மம், அனுமன், கருடன், சேஷம், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினமும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும். இதன்படி, புதன்கிழமை (செப். 16) கிருஷ்ணாவதார நிகழ்வும், 17-ஆம் தேதி ராம அவதாரம், 18-ஆம் தேதி கஜேந்திர முக்தி, 19 -ஆம் தேதி ராஜாங்க சேவை, 20-ஆம் தேதி மோகினி அவதாரம், 21-ஆம் தேதி புஷ்ப விமானம், 22-ஆம் தேதி வெண்ணெய்த் தாழி விழாவும் நடைபெற உள்ளது.

வருகிற 23-ஆம் தேதி திருத்தேராட்டம், 24-ஆம் தேதி பூப்பல்லக்கில் பெருமாள் வீதி உலாவும், 25-ஆம் தேதி திருமுக்குளத்தில் தெப்ப உத்ஸவம், 26-ஆம் தேதி உத்ஸவ சாந்தி நடைபெற்று நிகழாண்டுக்கான திருவிழா நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கள்ளழகா் கோயிலின் இணை ஆணையா் ஆா். ஹரிஹரன் தலைமையிலான அலுவலா்கள், பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.