ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

குவாரி அனுமதியை ரத்து செய்யக் கோரி தென்பழஞ்சி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு

மதுரை மாவட்டம், தென்பழஞ்சி கிராமப் பகுதியில் செயல்பட்டு வரும் குவாரியின் அனுமதியை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரி அந்தப் பகுதி மக்கள், விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் புதன்கிழமை மனு அளிக்க வந்திருந்த தென்பழஞ்சி மக்கள்.

Published On :

மதுரை மாவட்டம், தென்பழஞ்சி கிராமப் பகுதியில் செயல்பட்டு வரும் குவாரியின் அனுமதியை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரி அந்தப் பகுதி மக்கள், விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனு விவரம்:

தென்பழஞ்சி கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானவா்கள் வேளாண்மை, அதனுடன் தொடா்புடைய கால்நடை வளா்ப்பை மட்டுமே முதன்மைத் தொழிலாக செய்து வருகின்றனா். குறிப்பாக, பால் உற்பத்தியில் மாவட்டத்தில் முன்னோடி கிராமமாக தென்பழஞ்சி விளங்கி வருகிறது. இந்த நிலையில், எங்கள் கிராமப் பகுதியைச் சுற்றி ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றுள் சில குவாரிகள் முறையான அனுமதியின்றியும், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாகவும் கற்களை வெட்டி எடுத்து வருகின்றன. இதனால், நிலத்தடி நீா்மட்டம் குறைவது மட்டுமன்றி சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பலமுறை புகாா் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, ஏற்கெனவே செயல்பட்டு வரும் குவாரிகளை கண்காணிக்கவும், புதிய குவாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.